இன்றைய தினம் - ஏப்ரல் 26

 Monday, April 26, 2021  07:16 AM   No Comments

அறிவுசார் சொத்துரிமை நாள்

'மக்களின் அன்றாட வாழ்வில் அறிவுசார் சொத்துரிமையின் பங்கு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகளாவிய ரீதியில் கண்டுபிடிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் சமூகத்துக்கு அளிக்கும் பங்களிப்புகளை கௌரவிக்கவும்' இந்நிகழ்வு 2001-ல் அறிவுசார் சொத்துரிமை அமைப்பினால் (World Intellectual Property Organization, WIPO) ஆரம்பிக்கப்பட்டது.

1897 – பெ. சுந்தரம் பிள்ளை, மனோன்மணீயம் என்ற நாடக நூலைப் படைத்த தமிழறிஞர் (பி. 1855) நினைவு தினம்

1920 – சீனிவாச இராமானுசன், இந்தியக் கணிதவியலாளர் (பி. 1887) நினைவு தினம்

1564 – நாடகாசிரியர் வில்லியம் சேக்சுபியர் இங்கிலாந்தில் வாரிக்சயரில் ஞானஸ்நானம் பெற்றார் (இவர் பிறந்த நாள் அறியப்படவில்லை).

1803 – பெருமளவு விண்வீழ்கற்கள் பிரான்சின் லாயிகில் நகரில் வீழ்ந்தன.

1903 – அத்லெடிகோ மாட்ரிட் கால்பந்து கூட்டமைப்பு அணி உருவானது.

1923 – யோர்க் இளவரசர் எலிசபெத் போவ்சு லியோனைத் திருமணம் புரிந்தார்.1962 – நாசாவின் ரேஞ்சர் 4 என்ற ஆளில்லா விண்கலம் சந்திரனில் மோதியது.

1963 – லிபியாவில் அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டு, பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

1981 – உலகில் முதல் தடவையாக திறந்த கருப்பை அறுவை சிகிச்சை அமெரிக்காவில், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது.

1989 – உலக வரலாற்றில் மிகப் பயங்கரமான சுழல் காற்று வங்காளதேசத்தின் நடுப்பகுதியைத் தாக்கியதில் 1,300 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர், 12,000 பேர் காயமடைந்தனர், 80,000 வீடுகளை இழந்தனர்.

1762 – சியாமா சாஸ்திரிகள், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (இ. 1827) பிறந்த தினம்

1914 – ஆர். சுதர்சனம், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் பிறந்த தினம்

1938 – நீல பத்மநாபன், தமிழக எழுத்தாளர் பிறந்த தினம்

1970 – சரண்யா பொன்வண்ணன், தென்னிந்தியத் திரைப்பட நடிகை பிறந்த தினம்

1973 – சமுத்திரக்கனி, தமிழகத் திரைப்பட இயக்குநர் பிறந்த தினம்Similar Post You May Like

 • இன்றைய தினம் -- ஏப்ரல் 7

   Fri, May 7, 2021 No Comments Read More...

  இன்று உலக சுகாதார தினம்! உலக நலவாழ்வு நாள் (World Health Day) என்பது உலக சுகாதார அமைப்பின் அனுசரணையுடன் ஒவ்வோர் ஆண்டும் 7 ஏப்ரல் கொண்டாடப்படுகின்றது. 1948 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலக நலவாழ்வு மன்றத்த

 • இன்றைய தினம் - ஏப்ரல் 6

   Thu, May 6, 2021 No Comments Read More...

  1938 – கோ.நம்மாழ்வார், தமிழக இயற்கை ஆர்வலர் (இ. 2013) பிறந்த தினம் 1917 - முதலாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா ஜெர்மனி மீது போரை அறிவித்தது. 1919 - மகாத்மா காந்தி பொது வேலை நிறுத்ததை அறிவித்தார். 1

 • இன்றைய தினம் - ஏப்ரல் 25

   Sun, April 25, 2021 No Comments Read More...

  உலக மலேரியா நாள் உலக மலேரியா நாள் (World Malaria Day, WMD) ஆண்டுதோறும் ஏப்ரல் 25 ஆம் நாள் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மலேரியா நோயினால் சுமார் 7 லட்சம் பேர் இறக்கின்றனர். உலக அளவ
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel