கோவை, நஞ்சுண்டாபுரத்தில் ஒரே வீதியில் 50 பேருக்கு கரோனா: அந்த பகுதி அடைக்கப்பட்டது

 hindutamil  Thursday, June 10, 2021  11:13 AM   No Comments

கோவை, போத்தனூர் அருகே உள்ள நஞ்சுண்டாபுரத்தில் ஒரேநாளில் 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த பகுதிகள் முழுவதும் அடைக்கப்பட்டு கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டது.



தமிழகத்தில் கோவை மாவட்டம் கொரோனா தினசரி தொற்று பாதிப்பில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் கிழக்குமண்டலத்துக்கு உட்பட்ட நஞ்சுண்டாபுரம் மேற்கு புதூர் பகுதியில் மாநகராட்சி பணியாளர்கள் சார்பில் பொதுமக்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மொத்தமாக 658 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் நேற்று முன்தினம் சுமார் 50 பேருக்கு தொற்று உறுதியானதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த வீதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள் யாரும் வெளியில் செல்லாதவாறும், புதிதாக யாரும் உள்ளே வராத வகையிலும் அடைத்து வைக்கப்பட்டுள்ளது.



Similar Post You May Like




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel