கோவையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து ஆர்ப்பாட்டம்..!

 .updatenews360  Thursday, June 10, 2021  04:27 PM   No Comments

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆட்டோவை கயிறால் கட்டி இழுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. கிட்டத்தட்ட லிட்டர் ஒன்றுக்கு ரூ.100ஐ எட்டும் தூர்த்தில் உள்ளன. இதனால் நடுத்தர மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது.இந்நிலையில், இன்று நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாவட்டம் எஸ்டிபிஐ கட்சி தலைவர் ராஜா உசேன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. அரசு கலால் வரியை உடனே திரும்பப் பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel