பஸ் ஸ்டாப்பில் மாணவிக்கு முத்தம்.. கோவையில் கம்பி எண்ணும் எலக்ட்ரீசியன்

 Thursday, November 25, 2021  05:03 PM   No Comments

திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே உள்ள பொன்னிவாடி கிராமம் எல்லப்பாளையத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் (26) எலக்ட்ரிஷன் வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

தனது காதலை பல நேரங்களில் பல விதங்களில் ரவிக்குமார் கூறியும், அக்கல்லூரி மாணவி காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தும் விடாத ரவிக்குமார் தொடர்ந்து அம்மாணவியை தன்னைத் தான் காதலிக்க வேண்டும் எனக் கூறி தொல்லை கொடுத்து வந்துள்ளார்

இதுகுறித்து மாணவி தனது பெற்றோர்களிடம் கூற, அவர்கள் ரவிக்குமாரை கண்டித்துள்ளார். இதனால் மாணவி மற்றும் பெற்றோர் மீது கடும் கோபத்தில் ரவிக்குமார் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கல்லூரி மாணவி ஊர் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த ரவிக்குமார், திடீரென மாணவியை இழுத்துக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார்

asd


இதனால் அவமானமடைந்த அம்மாணவி தனது பெற்றோர்கள் தெரிவித்ததையடுத்து, மூலனூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து தனிப்படை அமைத்த போலீசார், தலைமறைவான ரவிக்குமாரை தேடி வந்தனர். இந்நிலையில் ரவிக்குமார் மூலனூர் தினசரி காய்கறி சந்தை உள்ள ஒரு தேனீர் கடையில் பதுங்கி இருந்ததாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து ரவிக்குமாரை மடக்கிப் பிடித்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவனை 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel