அதிகரித்து வரும் கொரோனா; ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறை விடுதிகளில் சுற்றுலா பயணிகள் தங்க தடை

 Maalaimalar  Saturday, January 8, 2022  07:03 AM   No Comments

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் சனி மற்றும் ஞாயிறுகளில் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனத்துறைக்கு சொந்தமான விடுதிகளில் சுற்றுலா பயணிகள் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது

ஆனைமலை புலிகள் காப்பக வன பகுதியில் உள்ள சுற்றுலா தலமான டாப்சிலிப் மற்றும் வால்பாறை, ஆழியார்,பகுதியில் கடந்த கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் மாணவர்களின் அரையாண்டு விடுமுறை என இந்த சுற்றுலா தளங்கள் களைகட்டியது.

டாப்சிலிப் பகுதியில் யானை சவாரி, அடர்ந்த வன பகுதிக்குள் நடந்து செல்லும் ட்ரெக்கிங், என நிறைய பொழுதுபோக்கு அம்சங்களையும், ஆழியாறு அணை, கவி அருவி மற்றும் பூங்கா மற்றும் வால்பாறை பகுதியில் உள்ள அணைகள் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து வனத்துறை விடுதிகளில் தங்கி விடு முறையை கொண்டாடினர்.



தற்போது கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்திருப்பதால் வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தநிலையில் டாப்சிலிப், வால்பாறை மற்றும் அட்டகட்டி பகுதியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான சுமார் 45 தங்கும் விடுதிகளில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுதிகளில் தங்க வனத்துறை அனுமதி மறுத்துள்ளது.

வரும் வாரம் மற்றும் அடுத்த வாரத்துக்கான முன்பதிவு தொகையை சுற்றுலா பயணிகளுக்கு திருப்பிக்கொடுக்க வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும், கொரோனா நோய் தொற்று குறையும் பட்சத்தில் தமிழக அரசின் அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த நிலை நீடிக்கும் என்று வனத்துறை தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.



Similar Post You May Like




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel