ஊட்டிக்கு போறீங்களா.. அப்போ முதல்ல இத தெரிஞ்சுக்கோங்க!! கூடுதல் கட்டுப்பாடுகள் என்னென்ன

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், நீலகிரியில் உள்ள தலங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாகத் தமிழ்நாட்டில் வைரஸ் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்தச் சூழலில் ஓமிக்ரான் பரவலைத் தொடர்ந்து மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இன்றைய தினம் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 9000ஐ நெருங்குகிறது. கட்டுப்பாடுகள் கட்டுப்பாடுகள் இதன் காரணமாகத் தமிழ்நாட்டில் ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு - இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலமான நீலகிரியிலும் சில முக்கிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. என்ன காரணம் என்ன காரணம் நீலகிரியில் அமைந்துள்ள உதகை அரசு தாவரவியல் பூங்காவுக்குக் கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி 10 நாட்களில் மட்டும் 1.06 லட்சம் சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர். இந்தளவு அதிகப்படியான நபர்கள் சுற்றுலாத் தலங்களுக்கு வரும் கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது கடினம். எனவே வைரஸ் பாதிப்பு உயரும் வாய்ப்புகள் அதிகம். இதைக் கருத்தில் கொண்டே நீலகிரியில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் மாவட்ட ஆட்சியர் அம்ரித் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.

நேரக்கட்டுப்பாடு நேரக்கட்டுப்பாடு அதாவது நீலகிரியில் இருக்கும் அனைத்து சுற்றுலாத் தலங்கள் காலை 10 முதல் பகல் 3 வரை மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார். அதேபோல உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லத்துக்குப் பகல் 3 மணி வரை மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை ஏற்கனவே, நீலகிரி வரும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் 2 டோஸ் கொரோனா வேக்சின் போட்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல ஞாயிற்றுக்கிழமை (ஜன. 9) முழு ஊரடங்கு என்பதால் அன்றைய தினம் சுற்றுலாத் தலங்கள் செயல்பட அனுமதி இல்லை. அன்று அத்தியாவசிய கடைகள் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Similar Post You May Like
-
டாப்சிலிப்பில் வன உயிரின நாணய கண்காட்சி
Tue, May 24, 2022 No Comments Read More...பல்வேறு நாடுகளின் 160 கரன்ஸி நோட்டுக்கள், 200-க்கும் அதிகமான நாணயங்கள், 400-க்கும் அதிகமான தபால்தலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டன மே 22-ந்் தேதி சர்வதேச பல்லுயிர் பெருக்க தினமாக கொண்டாடப்படுகிறது. இ
-
முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது - நீலகிரி, கோவையில் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின
நீலகிரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்குள்ள சுற்றுலா தலங்களுக்கு வருவோர் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா நகரமான நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுல
-
அதிகரித்து வரும் கொரோனா; ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறை விடுதிகளில் சுற்றுலா பயணிகள் தங்க தடை
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் சனி மற்றும் ஞாயிறுகளில் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனத்துறைக்கு சொந்தமான விடுதிகளில் சுற்றுலா பயணிகள் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது ஆனைமலை புலிகள் காப்பக வன பகுதிய
