கோவையில் வீடு தேடி வரும் மரச்செக்கு எண்ணெய் வாகனம்

 Friday, October 12, 2018  12:30 PM  3 Comments

கோவையை சேர்ந்த ஆஸ்க் எரா இன்பிரா நிறுவனம் சார்பில் வீடு தேடி வரும் மரச்செக்கு எண்ணெய் வாகனம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

பாக்கெட்டுகளில் வரும் எண்ணெயின் உண்மைத்தன்மையில் மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், தற்போது கண்முன்னால் மரச்செக்கில் எண்ணெய் பிழிந்து தர இளைஞர்கள் தயாராகி உள்ளனர். சூலூரை சேர்ந்த ஒரு விவசாயி மகனும், பிபிஏ பட்டதாரியுமான விஜயக்குமார், டிப்ளமோ படித்த அவரது சாகோதரர் கண்ணன் இருவரும் இணைந்து ஒரு புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர்.

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் உற்பத்தி செய்யப்பட்டு, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் அன்றாட சமையல் எண்ணெய்க்கு மாற்றாக, நேரடியாக சுகாதார முறைப்படி தயாரிக்கப்படும் மரச்செக்கு எண்ணெயை அறிமுகம் செய்துள்ளனர். வாடிக்கையாளர் வீட்டுக்கே வந்து, மரச்செக்கில் எண்ணெயை பிழிந்தெடுத்து தருகின்றனர். கடந்த ஒரு ஆண்டாக திட்டமிட்டு, இந்த முறையை கண்டறிந்துள்ளனர்.

நடமாடும் மரச்செக்கு வண்டி

ஆஸ்க் எரா இன்பிரா என்ற நிறுவனத்தை துவக்கி, எண்ணெய் பிழியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். கடந்த ஓராண்டாக இளம் தொழில்முனைவோர் ராஜேஷ் கீர்த்தி, அந்தோனி குமார் மற்றும் பிரவின் ஆகியோர் இந்த முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றனர். இப்புதிய முயற்சியின் பயனாக, நடமாடும் மரச்செக்கு எண்ணெய் வண்டியை உருவாக்கினர். இந்த வாகனத்தில் வீட்டுக்கே இந்த மரச்செக்குகளை எடுத்து வந்து கண்முன்னே எண்ணெய் பிழிந்து தருவர்.

கைகளால் பறிக்கப்பட்ட கடலை, தேங்காய் போன்றவைகளிலிருந்து நேரடியாக சுகாதார முறைப்படி தரமான எண்ணெய் இதில் பிழிந்து தரப்படும். கந்தக தன்மையில்லாத தேங்காயிலிருந்து துாய்மையான தேங்காய் எண்ணெய் பிழிந்து தரப்படும்.கலப்பமில்லாத எண்ணெய்

எவ்வித கலப்படமும் இல்லாததாக இந்த எண்ணெய் இருக்கும். பிளாஸ்டிக் பொருட்களில் அடைக்காமல், நேரடியாக உங்களது பாத்திரத்தில் பிடித்து தரப்படும். இது 100% உடல் நலத்துக்கு உகந்தது. இதில், எவ்வித மெழுகு பொருட்கள் கலக்கப்படுவதில்லை. மரச்செக்கில் எண்ணெய் பிழிந்து தருவதால், உடல் நலம் நன்றாக இருக்கும். உடலில் வளர்சிதை மாற்றங்கள் சரியாக நடக்கும். எண்ணெய்யில் உள்ள பல்வேறு காரணிகள், சூட்டால் கெட்டுப்போகாமல் அப்படியே பாதுகாக்கப்படும்.

இது புற்றுநோய் போன்றவைகளை ஏற்படுத்தாது. மரச்செக்கிலானால் பிழியப்படும் தேங்காய் எண்ணெய், லாரிக் அமிலத்தை கொண்டிருக்கும். இது, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கிருமிகளுக்கு எதிராக செயல்படும். இது தாய்ப்பாலில் மட்டுமே உள்ள சக்தியாகும். தேங்காய் எண்ணெயில் டிரைக்ளைகோரைட்ஸ் தொடர், மனிதனுக்கு வளர்சிதை மாற்றங்களை மாற்றி அமைப்பதோடு, பல்வேறு மூளை தொடர்பான சிக்கல்களுக்கும் தீர்வளிக்கிறது.

கடலை எண்ணெய், குறைந்த வெப்பநிலையில் பெறப்படுவதால், கொழுப்பு எண்ணெய்யில் மாறுதல் ஏற்படாமல், வைட்டமின்கள், கனிமங்கள் அப்படியே கிடைக்கின்றன. கடலையில் உள்ள நியாசின் (வைட்டமின் பி வகை) சர்க்கரை அளவை நிலைப்படுத்த உதவுகிறது. அதோடு குறைந்த நிறைவு பெற்ற டிரான்ஸ்பேட் கொண்ட, அதிக வைட்டமின் உள்ளதாக இருக்கும். மிகுந்த சுவையான, மணமான சமையலுக்கு இது உதவும்.

புதிய திட்டத்தின் சிறப்பம்சம்

மரச்செக்கில் எண்ணெய் பிழியும் இயந்திரங்கள் கொண்ட வாகனம், கோவையின் ஒவ்வொரு பகுதியிலும் சென்று வர ஆஸ்க் எரா இன்பரா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. மரச்செக்கு மற்றும் வாகனங்களை வங்கி கடனுதவியுடன் இயக்க முடிவு செய்துள்ளது. இந்த வணிகத்தில் இளைஞர்களும் பங்கேற்கவும், நல்ல வருவாய் ஈட்டவும் வாய்ப்பளிக்கிறது. கோவையில் குடியிருப்போருக்கு சிறந்த தரமான எண்ணெய் வழங்குவதோடு, சந்தைப்படுத்துதலையும் மேம்படுத்துகிறது. ஆரம்பத்தில் 50 மொபைல் வேன்களை அறிமுகம் செய்து, பின்னர் தேவைக்கு ஏற்ப எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. --- credits t0 https://makkalkural.net


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

User Comments...


Sivakumar Prakash Sivakumar Prakash commented on 1 year(s) ago
pls give us contact number always to contact them for this kind of initiative and welfare things like Valparai. Thanks..
Mohan raj Mohan raj commented on 1 year(s) ago
ASK ERA INFRA PVT LTD   SK, 7th&8th Cross Bharathi Park, Saibaba Colony, Coimbatore - 641011, Ph : : 095979 12415
Thiruvengadam L Thiruvengadam L commented on 1 year(s) ago
give me contact details
Subscribe to our Youtube Channel


Noyyal_media_Right1
Noyyalmedia_right2