அதிமுகவின் ஒரு மெகா புள்ளி, திமுக பக்கம் வரப் போகிறாராம்.. '.. ஷாக்கில் அதிமுக

 Wednesday, November 24, 2021  11:40 AM   No Comments

அதிமுகவின் ஒரு மெகா புள்ளி, திமுக பக்கம் வரப் போகிறாராம்.. இப்படி ஒரு அனுமானமான தகவல் கசிந்ததுமே, அவர் யார் என்ற பரபரப்பு டிஸ்கஷன்தான் தமிழக அரசியல் களத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது..!

இதனை இன்னமும் முதலமைச்சர் ஸ்டாலினால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. கொங்குவில் குறைந்தபட்சம் 20 தொகுதிகளையாவது ஈஸியாக வென்றிருக்க வேண்டியது, ஆனாலும் கைநழுவி போய்விட்டதே என்று ஸ்டாலின் மனம் வெதும்பியதை மறுக்க முடியாது.

அதுமட்டுமல்ல, இதன்காரணமாகவோ, கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் மீது கடும் அதிருப்தி கொண்ட முதல்வர் ஸ்டாலின், சம்பந்தப்பட்ட நிர்வாகிகளை மாற்றும் திட்டத்தையும் கையில் எடுத்திருந்தார்.. அதற்காகவே அமைச்சர் செந்தில்பாலாஜியையும் முன்கூட்டியே அங்கே அனுப்பி வைத்திருந்தார். அதன்படியே ஓரளவு களையெடுப்பும் அங்கு நடந்தது. இதற்கு பிறகுதான், மாவட்ட வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக 16 மாவட்டங்களுக்கு 14 அமைச்சர்களை முதலமைச்சர் ஸ்டாலின் நியமித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

பொறுப்பு

அந்த வகையில் கோவை மாவட்டத்துக்கு செந்தில்பாலாஜியையே பொறுப்பு அமைச்சராக நியமித்துள்ளார்.. மாவட்ட வளர்ச்சி பணிகளை மேம்படுத்துவதற்காகவே இந்த நியமனம் என்று கருதப்பட்டாலும்கூட, அடுத்து வரப்போகும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியை திமுக கைப்பற்ற வேண்டும் என்பதற்காகவே செந்தில்பாலாஜி கோவைக்கு அனுப்பி வைத்துள்ளார் முதல்வர் என்ற கருத்தும் நிலவுகிறது.செந்தில்பாலாஜி

கோவைக்கு பொறுப்பு தந்ததில் இருந்தே, அந்த மாவட்டத்தின் மீது சிறப்புகவனம் எடுத்து செயல்பட்டு வருகிறார் செந்தில்பாலாஜி... தேர்தல் பணி ஒருபக்கம் இருந்தாலும், கட்சியின் வளர்ச்சி பணிகளை விரிவுபடுத்தி வருகிறார்.. அதன்படி கடந்த 2 மாதங்களாகவே மாற்று கட்சியில் இருப்பவர்கள் திமுக பக்கம் சாய்ந்து வருகிறார்கள்.

ஒன்றியம்

அதாவது, எஸ்பி வேலுமணிக்கு எதிரான அரசியலை செந்தில்பாலாஜி 2 மாதத்துக்கு முன்பேயே கையில் எடுத்துவிட்டதாக சொல்கிறார்கள்.. அதன்படிதான் இப்போது, சூலுார் ஒன்றியத்தில் 4 முக்கிய அதிமுக கவுன்சிலர்களை திமுக பக்கம் இழுத்து வந்துள்ளார் செந்தில்பாலாஜி.. அதாவது, ஒன்றியத்தை திமுக வசம் கொண்டு வந்துவிட்டதாகவே இது பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, நாளுக்கு நாள் செந்தில் பாலாஜி மீதான நம்பிக்கையும் அதிகரித்து கொண்டே வருவதற்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள்.. இதைதவிர, இன்னொரு முக்கியமான விஷயமும் கசிந்து வருகிறது..

யார் அவர்

மாவட்ட அதிமுகவில் பெரிய தலை ஒருவருக்கு செந்தில்பாலாஜி வலை விரித்துள்ளாராம்.. அந்த வலையில் மெகா புள்ளி ஒன்று சிக்கிவிட்டதாகவும், கூடிய சீக்கிரமே திமுகவில் இணைய போவதாகவும் சொல்கிறார்கள்.. இதனால் அதிமுக கூடாரமே கலங்கி போயுள்ளதாம்.. ஏற்கனவே, உட்கட்சி பூசலால் பலவீனப்பட்டு வரும் நிலையில், அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலர் திமுக பக்கம் சென்று வருகிறார்கள்.. இப்போது 'பெரிய மீன்' ஒன்றும் வலையில் மாட்டி உள்ளது மேலும் கொங்கு அதிமுகவில் புகைச்சலை கிளப்பி விட்டு வருகிறதாம்Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel